Posts

Showing posts from May, 2010
Image
உன் மீதான என் காதல் கடவுளைப் போன்றது தொடக்கமும் இல்லை முடிவும் இல்லை அது போலவே .. என் மீதான உன் காதலும் ' கடவுளை போன்றது உண்டா ? இல்லையா ? நீயே சொல்
பெண் பூட்டும் ஆண் சாவியும் காதலை திறக்கிறார்கள்
Image
முக நூலில் நண்பர் ராஜ் பிரின்ஸ் எழுதியது இதுதான் காதலா? Share Tuesday, 27 April 2010 at 21:23 இதுவரை ஒன்றுமில்லாத வெளிகளில் சுற்றித்திருந்த என்னைச்சுற்றி ஒரு நந்தவனம் தோன்றியது எப்படி? திடீரென்று நான் எப்படி அழகான வனாந்தரத்துக்குள் வந்தேன். இத்தனை நாளும் வெறுமையில் உறங்கிய நான் உன்னைக் கண்டபிறகு வார்த்தைகளின் வெள்ளத்தில் மிதந்தேனே அது எப்படி? நீ யார் எனக்கு? உன்னைப் பார்க்கும் போதெல்லாம் மனம் என்னெவெல்லாமோ செய்கிறதே ஏன்? மனதில் என்னென்னமோ வைத்துக்கொண்டு ஏதேதோ கேட்கிறேன், நீயும் என்னவெல்லாமோ வைத்துக்கொண்டு என்னவோ சொல்கிறாய். இருவரும் எப்போது மனதில் உள்ளதை மட்டும் பேசுவோம்? என் அன்பெல்லாம் உனக்குப் புரியுமா என்பதைக் காட்டிலும் நீ எனதன்பை உணர்ந்தால் அதைத் தாங்குவாயா என்றே நினைக்கிறேன். உன் வருகைக்குப் பிறகு என் மனதிற்கு ஒருகோடிச் சிறகுகள் முளைத்தது எப்படி? நீ யார் எனக்கு, நீ எனக்கு மகிழ்ச்சியா? துயரமா? நீதான் என் உயிரா? நான் வெறும் சொல், நீதான் அர்த்தமா? நீ என் இறைவன் அளித்த வரமா? சாத்தான் தந்த சாபமா? நீதான் இறைவன் எனக்குள் ஊதிய பரிசுத்த ஆவியா? நீ என் ஆன்மாவின் இரத்தமா? உனக்கும் ...
Image
காதலில் பெண் துறக்கிறாள் ... ஆண் திறக்கிறான்