Posts

Showing posts from September, 2010
மின்சார கம்பியின் மேல் உட்கார பிரியப்படும் பட்டாம்பூச்சியாய் நானிருப்பதை நீ ரசிக்கிறாய் .. உன் மீதான என் ரசனைகளை நீ ரசித்திருப்பினும், பாராமுகம் காட்டிக்கொள்வதில் உனக்கேட்படும் சிலிர்புகளை நான் உணராமல் இல்லை ..சுடு மணலில் நிற்கவே உன்னையறியாமல் நீ விரும்புவதை போலவே ...உன்னையறியாமல் நீ என்னை உணரும் காலம் வர காத்திருப்பேன் ...
நீ இரவு நான் பகல் நாம் பகலிரவு அதிகாலையில் நீ எனக்கு சொல்லும் காலை வணக்கங்கள் என்னை வந்தடைவதென்னவோ இரவில்தான் என்றாலும் உனக்கும் எனக்குமான கால தூர இடைவெளிகளை தட்டச்சு வெகுவாய் குறைத்து விடுகிறது thanx to face book
இல்லாததற்கு தவிப்பதே மனதின் வேலை ....!
இதழ்களில் ரத்தத்தை வரவழைக்காத முத்தம் ......சைவம் .....
வார்த்தைகளே இல்லாமல் ஒரு கவிதை எழுத வேண்டும் ....!
வாங்குவதற்கு ஏங்குவதை போலவே ...கொடுப்பதற்கும் ஏங்க வேண்டும் ...
நீரில்லா ஆற்றங்கரையில் நான் தனிமையில் நின்றிருக்கிறேன் நம் ஈர நினைவுகளோடு ...
கேள்வி கேட்டால் ஏன் எல்லோரும் பதிலையே தருகிறார்கள்
உனைக்காண்பதற்கென்றொருவிழியும் உனைக்காணாதபோது கண்ணீர்சிந்தியழ ஓராயிரம் விழிகளும் வேண்டுமடி .....