Posts

Showing posts from 2011

கனவு மயக்கம் ..

புன்னகை நகரத்தின் பெரு வீதி ஒன்றில் அகல விழிகளோடு எனை தேடி நீ அலைந்ததை என் கனவில் நான் கண்டேன்... பூ நுகரும் உன் சிறுநாசியில் வழிந்த பெருமூச்சுக்களில் குளிர் காயும் பெரும்காடு ஒன்று எரிகிறதடி....

உன் அனுமதியில் தெரியும் என் விருப்பம்...!

உன் அனுமதி இருந்தால் ... உன் இதயத்தின் ஓசையை நான் கேற்பேன் ...:)

ஆயிரமாயிரம்

ஆயிரமாயிரம் வலிகளை தாங்கியே சிலை உருபெருகிறது ..

அன்பே

மௌன கதவை மூட தெரிந்த உனக்கு அதை தாழிட முடியவில்லை உன் மௌனமே என்னை பேசவைக்கிறது.. எப்போதும் ....!

முன்னிரவு

மழை பெய்த காலம்...நாம் மையல் கொண்ட நேரம் ... முத்து கோர்த்த காலம்.. நாம் முத்தம் செய்த நேரம் .. முன்னிரவு காலம்... நாம் முறுவல் செய்த நேரம்... கண்ணிமைக்கும் நேரம்... அது கண்ணில் நின்று ஆடும் ...!

தழுதழுத்த நொடியொன்றில்

நானும் நீயும் தந்தை -தாயுமாய் இருந்தோம் .... உன் குரல் தழுதழுத்த நொடியொன்றில் .. நான் உனக்கு மகனாய் பிறந்தேன் .....

வாடா முள்

காதல் ரோஜாவின் இதழ் வாடினாலும் முள் வாடாது...

காயத்தில் கண்ணீர் சிந்தும் காலமே ..!

ரணத்தின் மீது கண்ணீர் சிந்தாதே காலமே....ஒரு நொடியில் கடந்து போகும் காலமே... ஆயிரம் ஆச்சர்யங்களையும் ஆயிரம் அதிர்சிகளையும் ஏன் நொடிக்கொன்றாய் மாறிமாறி வைத்திருக்கிறாய் ...புன்னகைசெய்து புன்னகை செய்து மனம் புண்ணாய் போனது .....ஒரு நொடி பூ பூக்கிறாய் ...மறு நொடி அனலாகிறாய் ...காலமே.. ..எனை ஏன் வதைக்கிறாய் ...உன்னோடு பயணிக்க என்னை ஏன் பணிக்கிறாய் ...உன்னோடு உடன்பட ஏன் என்னை சிதைக்கிறாய் ..தொல்காப்பியா ..தமிழ் திருவுருவே ...என்னோடு துணைக்கு வா ...மாணிக்கவாசகா... என்னோடு வாசம் செய் ... மகாகவியே இன்னும் கொஞ்சம் தமிழ் சொல்லிகொடு.. ...இந்த காலத்தை சபிக்க......

இன்னும் கொஞ்சம்....

இன்னும் கொஞ்சம் சினம் கொள் நெஞ்சே .... இன்னும் கொஞ்சம் நேசம் கொள் நெஞ்சே இன்னும் கொஞ்சம் துரோகம் தாங்கு மனமே .. இன்னும் கொஞ்சம் இரக்கம் செய் மனமே ... இன்னும் கொஞ்சம் பயணம் செய் காலமே .....:)

மொழி வேண்டும் .......

பேசாத மொழி பற்றி பேச ஒரு மொழி வேண்டும் .......

பச்சை

பச்சை நிற பூக்காட்டில் ஒரு பூவும் பச்சை நிறத்தில் இல்லை .....:

மனம்

மரணத்தை அறிய அறிய மனம் மிதக்கிறது ...:)

குழப்பம்

கதவு திறந்தேன் வெளிச்சம் உள்ளே வந்ததா..? இருள் வெளியில் சென்றதா ....?

வானமே பறவை

வானமே பறவை காற்றே அதன் சிறகு .....