வேண்டும் இரவும்,பகலும் அல்லாத ஒரு பொழுது ... ஞாயிறும்,திங்களும் கலந்த ஒரு நட்சத்திரம்... காயங்களுக்கு மருந்து தடவ கவிதை.... எப்போதும் விழியோரத்தில் தித்திப்பாய் ஒரு துளி கண்ணீர் ...
நிசப்தத்தின் பேரிரைச்சல் ..... இருள் என்பது மிகக் குறைந்த ஒளி எனப்படும்போது... நிசப்தம் என்பது மிகக் குறைந்த ஒலியே .... நிசப்தத்தின் பேரிரைச்சலை தேடிக்கொண்டிருக்கிறேன்
விடுபட முடியாத விருப்பம் நான் தழுவ .... நீ நழுவ .. நான் தழுவத் தழுவ .... நீ நழுவ நழுவ.... கண்கள் சொருகச் சொருக ... காமத்தீ பெருகப் பெருக ... நீ உருக .. உருக.. தீப் பெருகப் பெருக ... அன்பே உன்னை ஆரத் தழுவத் தழுவ அந்தக் கணம் ஆயிரம் கோடிக் கைகள் வேண்டுமடி.....