பத்மாவதி
குரு : அதிக மகத்துவம் வாய்ந்தது எது ?
அழகா? குணமா ?
பத்மாவதி : குணம்...
குரு : அப்போது அழகு ..?
பத்மாவதி : அது காண்பவர் கண்களை பொறுத்தது …
குரு : அப்படியென்றால் …?
பத்மாவதி : சிலருக்கு கல்லில் சிவலிங்கம் தெரியும்… சிலருக்கு சிவலிங்கமே கல்லாக தெரியும்..
குரு : ம்ம்…
வாழ்க்கை என்றால் என்ன மூன்றே சொற்களில் சொல் …
பத்மாவதி : ஆன்மீகம், அன்பு,தியாகம்
குரு : அன்பு என்றால் என்ன ?
பத்மாவதி : இறைவனின் கண்களில் இருந்து சொரியும் ஆனந்த கண்ணீர் …
குரு : கண்ணீரின் அர்த்தம் என்ன…?
பத்மாவதி : சுக துக்கங்களின் எல்லைக்கோடு …
குரு : சுகம் என்றால் என்ன,,,?
பத்மாவதி : பிரமை
குரு : தங்களுக்கு போர் நீதி கூட தெரியுமா …?
பத்மாவதி : ம்…
குரு : போர்க்களத்தில் மிகப்பெரிய ஆயுதம் எது …?
பத்மாவதி : துணிச்சல்…
குரு ; வாழ்க்கையில் மிகக் கடினமான காலம்..?
பத்மாவதி : முடிவுகளுக்காக காத்திருக்கும் காலம் ..
குரு : மிகப்பெரிய பரிசு :
பத்மாவதி : ஆசிர்வாதங்கள் …
பத்மாவதி - S L B
Comments
Post a Comment