போனதெல்லாம் போகட்டும் என்ற எண்ணம் உங்கள் மனதில் தோன்றிய பிறகே உங்களுக்கு பிடித்த மாதிரி வாழ ஆசைப்படுகிறீர்கள் என்ற அறிகுறி உங்கள் மனதிற்கு தெரிய வருகிறது.
குரு : அதிக மகத்துவம் வாய்ந்தது எது ? அழகா? குணமா ? பத்மாவதி : குணம்... குரு : அப்போது அழகு ..? பத்மாவதி : அது காண்பவர் கண்களை பொறுத்தது … குரு : அப்படியென்றால் …? பத்மாவதி : சிலருக்கு கல்லில் சிவலிங்கம் தெரியும்… சிலருக்கு சிவலிங்கமே கல்லாக தெரியும்.. குரு : ம்ம்… வாழ்க்கை என்றால் என்ன மூன்றே சொற்களில் சொல் … பத்மாவதி : ஆன்மீகம், அன்பு,தியாகம் குரு : அன்பு என்றால் என்ன ? பத்மாவதி : இறைவனின் கண்களில் இருந்து சொரியும் ஆனந்த கண்ணீர் … குரு : கண்ணீரின் அர்த்தம் என்ன…? பத்மாவதி : சுக துக்கங்களின் எல்லைக்கோடு … குரு : சுகம் என்றால் என்ன,,,? பத்மாவதி : பிரமை குரு : தங்களுக்கு போர் நீதி கூட தெரியுமா …? பத்மாவதி : ம்… குரு : போர்க்களத்தில் மிகப்பெரிய ஆயுதம் எது …? பத்மாவதி : துணிச்சல்… குரு ; வாழ்க்கையில் மிகக் கடினமான காலம்..? பத்மாவதி : முடிவுகளுக்காக காத்திருக்கும் காலம் .. குரு : மிகப்பெரிய பரிசு : பத்மாவதி : ஆசிர்வாதங்கள் … பத்மாவதி - S L B
Comments
Post a Comment